நல்லூர் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
20 உறுப்பினர்களை கொண்ட நல்லூர் பிரதேச சபையில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக, 13 உறுப்பினர்களும், எதிராக இரண்டு உறுப்பினர்களும் வாக்களித்துள்ளனர்.மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.
இரண்டு முறை வரவுசெலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டதால் பதவியிழந்த முன்னாள் தவிசாளர் உட்பட இரண்டு உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.
இலங்கை தமிழரசு கட்சியியை சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகிக்க, ரெலோவின் இரண்டு உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூன்று உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்த நிலையில், இரண்டு உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.
மேலும், ஈபிடிபி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் சுயேச்சை குழு உறுப்பினர்கள் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.