யாழ். பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி வளாகத்தில் இந்து ஆலயம், பள்ளிவாசல், கத்தோலிக்க தேவாலயம் என்பன காணப்படுகின்ற நிலையில் பௌத்த விகாரையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பௌத்த விகாரையே தற்போது சேதமாக்கப்பட்டுள்ளது. இந்த பௌத்த விகாரை சேதமாக்கலின் பின்னணிகள் தொடர்பில் பல்வேறு ஊகங்கள் ஏற்பட்டுள்ளன.
எனினும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த விடயத்தில் தொடர்புகள் இல்லை என்று மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.





