இந்தியாவில் உள்ள இளைஞர்கள் திருக்குறள் படிக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி கீச்சகத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
“போற்றுதலுக்குரிய திருவள்ளுவரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன்.
அவரது சிந்தனைகளும் படைப்புகளும் அவரது மகத்தான அறிவையும் அவருக்கு வாய்த்த ஞானத்தையும் பிரதிபலிக்கின்றன.
அவரது இலட்சியங்கள் தலைமுறைகளைக் கடந்து மக்களிடம் ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
இந்தியா முழுவதிலும் வாழும் இளைஞர்கள் குறளைப் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்றும் அந்தப் பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.