டுபாயில் இரண்டாவது மருந்தளவு கொரோனா தடுப்பூசியை போடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 21 நாட்கள் நிறைவடைந்திருந்தால் அவர்களுக்கு இரண்டாவது மருந்தளவு தடுப்பூசி போடப்படுகிறது.
டுபாய் நகரில் செயற்பட்டுவரும் ஆரம்ப சுகாதார மையங்களிலும், ஹத்தா மருத்துவமனையிலும் இந்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
டுபா யின் நகரில் வசித்து வரும் மருத்துவ பணியாளர்களுக்கும், முக்கிய பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், நாட்பட்ட வியாதியுடையோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.