பைசர்-பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசிகள் கனடாவிற்கு கிடைப்பதில் தற்காலிக தாமதமொன்று ஏற்படுமென தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகளுக்கான தேவைப்பாடுகள் அதிகரித்திருப்பதன் காரணமாக கனடாவின் கோரிக்கையில் 50சதவீதமான அளவினையே பைசர்-பயோஎன்டெக் நிறுவனத்தினால் வழங்கமுடியும் என்ற அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.
எனினும் இதுவொரு தற்காலிக தாமதம் தான் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, உலகின் அனைத்து நாடுகளையும் கவனத்தில் கொள்ள வேண்டிய தேவையிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கனடாவானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் நிறைவடையும் வரையில் வாரமொன்றுக்கு 3.5மில்லியனுக்கு அதிகமான தடுப்பூசி மருந்துகளை இறக்குமதி செய்யத்திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.