கொங்கோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 46 பொது மக்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொங்கோவில் உள்ள இருமூ மாகாணத்தில் அபிமீ என்ற கிராமத்தில் பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலை ஏ.டி.எப். என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியதாகவும், இதில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.