கனடாவில் இண்டாம் கட்ட கொரோனா தடுப்பு மருந்தளவைச் செலுத்துவதில் தமாதங்கள் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அமைச்சர் அனிதா ஆனந்த் கவலை வெளியிட்டுள்ளார்.
அத்துடன் ஏற்பட்டுள்ள தாமதங்களுக்கு தம்முடன் ஒப்பந்தங்களைச் செய்துள்ள மருந்து உற்பத்தி நிறுவனங்களும் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமஷ்டி அரசு இரண்டாவது மருந்தளவை நடாளவிய ரீதியில் வழங்குவதற்குரிய ஏற்பாடுகளையும், திட்டமிடல்களையும் மேற்கொண்டிருந்தபோதும் உற்பத்தி நிறுவனங்களில் ஏற்பட்ட அதிகளவான கேள்வியே இந்த நிலைமைக்கு காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அடுத்த வாரத்திற்குள் மீண்டும் தடுப்புசிகளை இறக்குமதி செய்வதற்கான திட்டமிடல்களைச் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.