கனடிய பெரு நகரங்களிலிருந்து எல்லைப்பகுதிகளில் உள்ள சாதாரண கிராமங்களை நோக்கி மக்கள் நகரத்தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சதாரண பெறுமதியில் வாடகை வீட்டினை பெற்றுக்கொள்ளும் நிலையிலேயே அவர்கள் இவ்வாறு பெருநகரை விட்டுவெளியேற ஆரம்பித்துள்ளனர்.
வெளியாகியுள்ள புள்ளிவிபரங்களின் பிரகாரம், ரொரண்டோவில் இருந்து கடந்த 12 மாதங்களில் 50ஆயிரத்து 375பேரும், மொன்ரியலிருந்து 24ஆயிரத்து 880பேரும் வெளியேறிவிட்டதாக கூறப்படுகின்றது.
இந்த நிலைமையானது, கனடிய பெருநகரங்களின் நெரிசல்கள் குறைவடைவதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.