கிளிநொச்சி, பரந்தன் – முல்லைத்தீவு வீதியில், முரசுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு 11.45 மணியளவில் முல்லைத்தீவில் இருந்து சென்று கொண்டிருந்த பாரஊர்தியுடன், உந்துருளி மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் தர்மபுரத்தை சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார்.
பாரஊர்தியின் சாரதி விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.