பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட புதியவகை கொரோனா வைரஸ் தொடர்பான ஆய்வுகளில் கனடிய விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் மாதிரிகள் மற்றும், தொற்றுக்குள்ளானவர்கள் தொடர்பில் நீண்ட ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை, பைசர் நிறுவனத்தின் தடுப்பு மருந்து புதிய வகை கொரோனா வைரஸின் வீரியத்தினை குறைக்கின்றதா என்ற கோணத்திலும் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பான விடயங்களை உடனுக்குடன் கனடிய சுகாதாரத் துறையினருடன் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.