உலக புகழ்பெற்ற மதுரை – அலங்காரநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று மாலை 5 மணிக்கு முடிவுக்கு வந்துள்ளது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு அலங்காநல்லூரில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது.
8 சுற்றுகளாக நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 மாடுபிடி வீரர்கள் மற்றும் 720-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றிருந்தன.
12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் கண்ணனுக்கு முதல் பரிசாக மகிழுந்து வழங்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இன்று மாடுகள் முட்டியதில், 41 பேர் காயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில், 18 மாடுபிடி வீரர்களும், 14 காளை உரிமையாளர்களும், 5 பார்வையாளர்களும், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆகியோரும் உள்ளடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.