வவுனியா நகரப் பகுதியில், கொரோனா தொற்று அச்சுறுத்தலை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்ட பாடசாலைகள், நாளை முதல் மீண்டும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது,
வவுனியாவில் நகர பகுதிகள் உள்ளிட்ட 19 கிராமசேவையாளர்கள் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட அநேகமான பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளதாகவும், இதுவரை 175 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் நகரின் நிலை குறித்து வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இதையடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ள அனைத்து பாடசாலைகளிலும், நாளை கல்வி செயற்பாடுகள் ஆரம்பிப்பதென முடிவு செய்யப்பட்டுள்ளது.