ஒன்ராரியோவில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வீட்டுக்குள்ளேயே தங்கயிருக்கும் உத்தரவுகளை முறையாக பின்பற்றாது விட்டால் நிலைமைகள் பாரதூரமாகும் என்று அம்மாகாண விஞ்ஞான ஆலோசனைக் குழுவின் அங்கத்தவரான வைத்தியர் பீற்றர் ஜுனி (Peter Jüni) தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை வைரஸின் தாக்கம் கனடாவிலும் மேலும் வீச்சுப்பெறலாம் என்ற நிலைமையும் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாகவிருந்தால் நாளொன்றுக்கு 40ஆயிரம் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அத்துடன் புதிய வகை வைரஸ் உருமாறியுள்ளமையால் அதனை அடையாளம் காணப்பதிலும் சிக்கலான நிலைமையை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஆகவே தீவிரத்தன்மையை எட்டாதிருப்பதற்கு முடக்கல் அறிவிப்புக்களை முறையாக பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டார்.





