கனடாவில் கொரோனா தொற்றினால், 18 ஆயிரத்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், 149 பேர் உயிரிழந்துள்ளனர்.
கனடாவில், இதுவரை வைரஸ் தொற்றினால், 7 இலட்சத்து 08 ஆயிரத்து 619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் கடந்த 24 மணிநேரத்தில் 6ஆயிரத்து 436பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் 73ஆயிரத்து 929பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ஒன்ராரியோவில் 3ஆயிரத்து 422பேருக்கு கொரோனா தொற்று கடந்த 24 மணிநேரத்தில் பதிவாகியுள்ளது. அத்துடன் 69 மரணங்களும் சம்பவித்துள்ளன.