சிறிலங்கா அரசாங்கத்தில் இராணுவத் தலையீடுகள் அதிகரித்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், வங்கித் துறையிலும், முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் நிறைவேற்றுப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை வங்கி பணிப்பாளர் சபையின், நிறைவேற்றுப் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் சந்திரசிறியை, நிதியமைச்சரான சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளார்.
இவர் ஏற்கனவே, விமான நிலையங்கள், விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவராகவும், பதவி வகித்து வரும் நிலையிலேயே, வங்கித் துறைப் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.
மேஜர் ஜெனரல் சந்திரசிறி முன்னர் வடக்கு மாகாண ஆளுநராகவும் பதவி வகித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.