முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை குறித்து இந்தியாவிலிருந்து கிடைத்த செய்தியே, நினைவுத்தூபியை மீண்டும் உருவாக்க தீர்மானித்தமைக்கு காரணமாக அமைந்தது என்று இந்தியாவின் தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது
“நினைவுத்தூபி இரவில் அழிக்கப்பட்ட செய்தி கிடைத்த மறுநாள் இந்திய தூதுவர், கோபால் பாக்லே, சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளார்.
சிறிலங்கா விவகாரத்தில் புதுடில்லியின் தலையீடுகள் குறித்த முணுமுணுப்புகளுக்கு மத்தியில் இந்த சந்திப்பு குறித்த விபரங்கள், மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தன. என்றும அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இந்திய தூதுவர், சிறிலங்கா பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்தார், அவர்கள் நினைவுத்தூபி விவகாரம் குறித்து ஆராய்ந்தனர் என்று, சிறிலங்கா பிரதமரின், ஊடக செயலாளர் றொகான் வெலிவிட்ட உறுதிப்படுத்தியுள்ளார்
அதேவேளை, புதிதாக உருவாக்கப்படும் நினைவுத்தூபி, போருக்குப் பதிலாக, சமாதானத்தையே கொண்டாடும் என்று, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
நினைவுத்தூபியை கட்டியெழுப்புவது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை உருவாக்கியுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.