யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பொதுச் சந்தைகள் இன்று மீள திறக்கப்பட்டுள்ளன.
மருதனார்மடம் சந்தை மற்றும் அதனுடன் தொடர்புடைய பலருக்கு கடந்த மாதம், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள அனைத்து பொது சந்தைகளும் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டன.
மருதனார்மடம் சந்தைக் கொத்தணியுடன் தொடர்புடைய தொற்று எண்ணிக்கை குறைவடைந்துள்ள நிலையில், வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டுதலுக்கு அமைய திருநெல்வேலி, மருதனார்மடம் உள்ளிட்ட அனைத்து பொதுச்சந்தைகளும், இன்று மக்கள் பயன்பாட்டுக்காக, இன்று திறந்து விடப்பட்டுள்ளன.
சந்தைகளில், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி, சமூக இடைவெளியைப் பேணி, வியாபார நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
மேலும், சந்தைகளில் காவல்துறையினர் சுகாதாரப் பிரிவினர் ஆகியோர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.