கொரோனா தொற்று நோய்க்கு பின்னரான நிலைமையில் கனடாவில் அரைபங்கிற்கும் மேற்பட்டவர்கள் பெரும் சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமைகள் ஏற்படும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது.
பொருளாதார மீட்சிக்காலமாக இருக்கப்போகும் அக்கால கட்டத்தில் தொழில்வாய்ப்புக்களைப் பெறுத்தல் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடியான நிலைமைகள் ஏற்படலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பின்னரான நிலைமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட களஆய்வு அறிக்கையொன்றிலேயே இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தச் செயற்பாட்டை தனியார் சுயாதீன ஆராய்ச்சி நிறுவனமொன்று மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





