சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் செனாரத் பண்டார நேற்று பொறுப்பேற்றுள்ளார்.
இராணுவத் தலைமையகத்தில் நேற்று நடந்த எளிமையான நிகழ்வில், அவர் சிறிலங்கா இராணுவத்தின் 57 ஆவது தலைமை அதிகாரியாக பதவியேற்றுள்ளார்.
முன்னதாக, மேஜர் ஜெனரல் சேனாரத் பண்டார, யாழ்ப்பாண படைகளின் கட்டளைத் தலைமையக தளபதியாக பதவி வகித்து வந்தார்.
1986ஆம் ஆண்டு சிறிலங்கா இராணுவத்தில் இணைந்து கொண்ட மேஜர் ஜெனரல் சேனாரத் பண்டார, போர் இடம்பெற்ற பிரதேசங்களிலேயே பெரும்பாலான காலம் பணியாற்றியிருந்தார் என்பதுடன், இறுதிக்கட்டப் போரில், 57-2 பிரிகேட் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, சிறிங்கா இராணுவத்தின் புதிய ஊடகப் பணிப்பாளராக பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரும், நேற்று, தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன முன்னதாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் நிலை கொண்டுள்ள 55 1 ஆவது பிரிகேட் படையணியின் தளபதியாக பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.