சிறிலங்கா காவல்துறையில், 150 தமிழ்பேசும் சட்டவாளர்களை தலைமை ஆய்வாளர்களாக நியமிக்கும் திட்டம், கடும் எதிர்ப்புக் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
குற்றங்கள், ஊழலுக்கு எதிராக செயற்படுவதற்காக, 150 தமிழ் பேசும் சட்டவாளர்களை, தலைமை ஆய்வாளர்களாக நியமிக்கும் யோசனை ஒன்றை, நீதியமைச்சர் அலி சப்ரி முன்வைத்திருந்தார்.
இந்த யோசனைக்கு சிங்கள பௌத்த கடும் போக்காளர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்புக் கிளம்பியிருந்தது.
சட்டவாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளினதும் எதிர்ப்புகளை அடுத்து, இந்த திட்டத்தைக் கைவிடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பொது பாதுகாப்பு அமைச்சர் றியர் அட்மிரல் சரத் வீரசேகரவுக்கும், நீதியமைச்சர் அலி சப்ரிக்கும் இடையில் நடத்தப்பட்ட சந்திப்பை அடுத்தே, இந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.