வவுனியா – தரணிக்குளம் பகுதியில், தலையில் காயங்களுடன் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
ஈச்சங்குளம் காவல் நிலையத்துக்கு அருகில், இன்று அதிகாலை சடலம் ஒன்று கிடப்பதாக, அவ்வழியே சென்றவர்கள், காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
சடலமாக கண்டுபிடிக்கப்பட்டவர் தரணிக்குளம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான, ஆ.யேசுதாசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.