அருணாச்சல பிரதேசதத்தில் இந்திய எல்லைக்குள், 4.5 கிலோமீற்றர் ஊடுருவி, சீனா புதிய கிராமம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அருணாச்சல பிரதேசத்துக்கு உட்பட்ட பகன்சிரி மாவட்டத்தின் சாரிசூ ஏரிக்கரை பகுதியில், சீன ராணுவம் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுடன் புதிய கிராமம் ஒன்றை உருவாக்கியுள்ளதாக செயற்கை கோள் புகைப்படத்தை தொலைக்காட்சி ஒன்று வெளியிட்டிருந்தது.
இந்த செயற்கைகோள் புகைப்படத்தை ஆராய்ந்த பாதுகாப்பு நிபுணர்கள், அதனை உறுதி செய்துள்ளனர்.
கடந்த 2019 ஓகஸ்ட் மாதம் அதே இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் புதிய ஆக்கிரமிப்பு எதுவும் தென்படவில்லை.
கடந்த ஆண்டு நவம்பரில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் புதிய கிராமம் உருவாகி இருப்பதை நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.





