கனடா, அமெரிக்கா இடையே முன்னெடுக்கப்பட்டு வரப்பட்டுக்கொண்டிருக்கும் கீஸ்டோன் எக்ஸ்எல் (Keystone XL) பாரிய குழாய் வழித்திட்டமானது கைவிடப்படும் என்று அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கான கனடிய தூதுவர் கிர்ஸ்டன் ஹில்மேன் (Kirsten Hillman) இந்த குழாய்வழித்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு கனடாவின் சமஷ்டி அரசு பூரணமான ஒத்துழைப்புக்களை நல்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த அறிவிப்பு வெளியாகி சற்று நேரத்தில் ஜோ பைடன் அத்திட்டத்தினை கைவிடுவதற்கு தயாராக உள்ளதாகவும் அத்திட்டம் சம்பந்தமான எதிர்மறையான நிலைப்பாடுகள் அதிகமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ஜஸ்டின் ரூடோ பதவியேற்ற காலம் முதல் இந்த திட்டம் பற்றிய பேச்சுக்கள் இடம்பெற்று 2013ஆம் ஆண்டிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனினும் பல எதிர்ப்புக்களை ரூடோ அரசாங்கம் சந்தித்து வந்திருந்தது.
இந்த திட்டம் அமுலாக்கப்படும் பட்சத்தில் எட்டு இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய் நாளொன்றுக்கு டெக்டா ஸு க்கு (TEXTAS) கொண்டு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.





