கனடாவில் ஆகக் குறைந்தது மூன்று மாகாணங்களில் கொரோனா தடுப்பூசி போடும் செயற்பாட்டை தற்காலிகமாக இடைநிறுத்தும் நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையை மையப்படுத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போயை நிலையில் அரைமில்லியனுக்கும் அதிகமான தடுப்பூசிகள் முழுமையாக போடப்பட்டுள்ளன. அதேநேரம் முதலாவது மருந்தளவு தடுப்பூசிகளும் கணிசமான அளவில் போடப்பட்டு வருகின்றன.
இந்நிலயில் பைசர் மற்றும் பயோ என்டெக் நிறுவனம் அடுத்தவாரம் முதல் தனது விநியோகத்தினை அரைவாசியாக குறைப்பதாக அறிவித்ததை அடுத்தே இந்த நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.
ஏற்கவே சில மாகாணங்கள் புதிததாக தடுப்பூசி போடும் செயற்பாடுகளை கைவிட்டு, ஏற்கனவே தடுப்பூசி போட்டவர்களுக்கான இரண்டாவது மருந்தளவை செலுத்த தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





