பல மாதங்களுக்கு பின்னர் ஜெர்மனியில் இருந்து நாடு திரும்பிய ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி (alexey navalny) 30 நாட்களுக்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தன் மீதான விச தாக்குதலுக்கு ரஷ்ய ஜனாதிபதியே காரணம் என்று குற்றம்சாட்டி வந்த அலெக்ஸி நவல்னி (alexey navalny) நேற்று மொஸ்கோ திரும்பிய போது, விமான நிலையத்தில் ரஷ்ய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
2014ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மோசடி வழக்கிலேயே நவல்னி கைது செய்யப்பட்டுள்ளார் என ரஷ்ய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நவல்னி (navalny) உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, அவரை 30 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நவல்னி ‘இது நீதியை கேலிக்கூத்தாக்கும் செயல்’ என்று கூறியதுடன், தனது ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி போராட வேண்டும் எனவும், அழைப்பு விடுத்துள்ளார்.