ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வரும் ஜனவரி 31ஆம் நாள் சிறிலங்கா ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவிடம் இருந்து சாட்சியத்தை பெறும் முயற்சிகளில் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளதாகவும், அவரது உடல் நிலை கருதி இன்னமும் சாட்சியத்தை பெற முடியவில்லை என்றும், ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கூடிய விரைவில் அவரிடம் இருந்து சாட்சியம் பெறப்பட்டு, ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வரும் 31ஆம் நாள் சிறிலங்கா ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்றும், அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடம் சாட்சியங்களைப் பெறும் நடவடிக்கைகளில் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளதாகவும், ஆணைக்குழு வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.