நான் சவாலான மோதல்களை எதிர்கொண்டேன். ஏனெனில், அதற்குத்தான் நீங்கள் என்னை தேர்ந்தெடுத்தீர்கள்” என்று அமெரிக்க ஜனாதிபதி பதவியிலிருந்து விடைபெறும் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் வன்முறை என்பது அமெரிக்கர்களாகிய நாம் மதிக்கும் எல்லாவற்றிற்கும் எதிரான தாக்குதல். இதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனது தலைமையிலான நிர்வாகத்தின் குறிக்கோள் வலது அல்லது இடதுசாரி என்றோ, ஜனநாயக கட்சி அல்லது குடியரசு கட்சி என்றோ இல்லாமல் ஒட்டுமொத்த தேசத்தின் நன்மைக்காகவே இருந்தது என்றும் டிரம்ப் கூறினார்.
இந்த நிலையில், ட்ரம்ப் பதவிக்கலாம் முடிவதை அடுத்து அவரது செயற்பாடு குறித்து நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் வெறும் 34சதவீதத்தினரே ஆதரவு வழங்கியுள்ளனர். சமீபத்திய ஆண்டுகளில் ஜனாதிபதி ஒருவரால் பெறப்பட்ட மிகக் குறைந்த மதிப்பீடாக இது உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.