மன்னாரில் முதலாவது கொரோனா தொற்றாளரின் மரணம் இன்று பதிவாகியுள்ளதாக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மன்னார் ‘சைட் சிட்டி’ பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு, உயிரிழந்தவர் கடந்த 30ஆம் திகதி சிகிச்சைக்காக மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் இந்த மரணத்துடன் வடக்கு மாகாணத்தில் இரண்டாவது கொரோனா மரணம் சம்பவித்துள்ளது.





