கனடாவின் வெளிநாடுகளுக்கான பயண ங்களுக்காக அனுமதி வழங்கும் விதிமுறைகளில் விரைவில் மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடாவின் சகல சர்வதேச விமானங்களின் ஊடாகவும் உள்வருவோர் மற்றும் வெளிச் செல்வோர் தொடர்பில் கடந்த 24 மணிநேரத்தில் அவதானங்களையும் ரூடோ செய்துள்ளார்.
முன்னதாக கியூபெக், ஒன்ராரியோ முதல்வர்கள் பயணக்கட்டப்பாடுகள் தொடர்பான விதிமுறைகளை மீளப் பரிசீலிக்குமாறு கோரியிருந்தனர்.
இந்நிலையில் பிரதமர் இவ்வாறு அறிவிப்பு விடுத்துள்ளதோடு வெளிச்செல்வோர் புதிய விதிமுறைகள் அமுலாக்கப்படும் பட்சத்தில் அதற்கு கட்டுப்பட வேண்டி ஏற்படும் என்றும் முன்னறிவித்தல் விடுத்துள்ளார்.