வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் இறுதி நாளான நேற்று அவரின் மகளான ரிப்பனி டிரம்பின் (Tiffany Trump) நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
வெள்ளை மாளிகையில் தனது தந்தையின் கடைசி நாளை மறக்க முடியாததாக மாற்றவும், வரலாற்று சிறப்புமிக்க இடத்தில் தனது நிச்சயதார்த்ததை நடத்தவும், இவ்வாறு ஏற்பாடு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் தங்கள் குடும்பத்துடன் பல்வேறு சிறப்புமிக்க நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளதாகவும், அதில் மிகவும் சிறப்பானது தனது நிச்சயதார்த்த விழா என்றும் ரிப்பனி டிரம்பின் (Tiffany Trump) தன் சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.