இந்தியாவின் வெளிநாடுகளுக்கான முதற்கட்ட தடுப்பூசி விநியோகத்தில், சிறிலங்கா உள்ளடக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மாலைதீவு, பூட்டான், பங்களாதேஷ், நேபாளம், மியான்மார், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு விநியோகிக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எனினும், சிறிலங்கா, ஆப்கானிஸ்தான், மொறிசியஸ் ஆகிய நாடுகளில் இருந்து, ஒழுங்கமைப்பு அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்றும், இந்த அனுமதிக்காக இந்தியா காத்திருப்பதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அண்டை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை இந்தியா கொடையாகவே வழங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சீனாவும், சிறிலங்காவுக்கு கொரோனா தடுப்பூசியை விநியோகிப்பதற்கு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது.
சினோபார்ம் மற்றும் சினோவக் ஆகிய சீன தயாரிப்பு தடுப்பூசிகளை சிறிலங்கா, இந்தோனேசியா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செர்பியா ஆகிய நாடுகளுக்கு விநியோகிக்க சீனா அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





