அமெரிக்காவின் புதிய நிர்வாகம் சிறிலங்காவுக்கு எதிராக மனித உரிமை குற்றச்சாட்டுகளை தொடரவுள்ளதால், உடனடியாக தேசிய மனித உரிமைகள் திட்டம் ஒன்றை அரசாங்கம் வகுக்க வேண்டும் என்று, பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவ வலியுறுத்தியுள்ளார்.
சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரான பேராசிரியர் பிரதிபா மஹாநாமஹேவ,
“அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின்னர், ட்ரம்பின் நிர்வாகம் முழுமையாக செயலிழந்துள்ளது.
விலகிச் சென்ற அனைத்து உலக அமைப்புகளும் மீண்டும் அமெரிக்காவுடன் இணைந்து கொண்டுள்ளன.
அடுத்த மாதம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது..
ஜோ பைடன் மற்றும் கமலா ஹரிஸ் ஆகியோர் இணைந்து, 2015ஆம் ஆண்டு சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட மனித உரிமைகள் தீர்மானத்தை மீண்டும் முன்கொண்டு செல்வார்கள்.
அவர்களுக்கு பின்னணியில் உள்ள அணியினரை பார்க்கும்போது இது தெளிவாகிறது.
எனவே, முடிந்தால் சிறிலங்காவில் உடனடியாக தேசிய மனித உரிமைத் திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.