கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் மேலும் 379 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 54 ஆயிரத்து 798 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இன்று கொரோனா தொற்றில் இருந்து மேலும் 621 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 215 ஆக அதிகரித்துள்ளது.