சிறிலங்கா குறித்து காட்டமான அறிக்கை ஒன்றை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிடவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடுத்த மாதம், 22ஆம் நாள், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் சிறிலங்கா தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
கடுமையான அறிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த அறிக்கையின் பிரதி, ஜெனிவா கூட்டத்தொடருக்கு முன்னதாக வெளியிடப்படும்.
இந்த அறிக்கையின் பிரதி பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, சிறிலங்கா அரசின் பதிலை உள்ளடக்குவதற்காக, கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரது அறிக்கையின் பிரதி சிறிலங்கா அரசாங்கத்துக்கு கிடைத்துள்ளது என்பதை, இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், நேற்று வரை இந்த அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலை அனுப்பவில்லை என்றும், அவர் கூறியுள்ளார்.