வேளாண் சட்டங்களை 6 மாதம் முதல் 1 வருடம் வரை இடைநிறுத்தி வைக்க தயார் என விவசாய சங்க பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் 57-வது நாளாக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன், மத்திய அரசு 9 கட்டங்களாக நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிந்த நிலையில், இன்று 10-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன்போதே, வேளாண் சட்டங்களை அமுல்படுத்தாமல் 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாகவும், குழு அமைத்து விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்றும், அமைச்சர் நரேந்திர சிங் தோமர் யோசனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் போராட்டத்தை கைவிடுவது குறித்து விவசாயிகள் இன்றே முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், விவசாயிகள் இன்னமும் இதற்கு இணங்கவில்லை.