உலகில், முதன் முறையாக, ஐக்கிய நாடுகள் சபையின் அணு ஆயுத தடை சட்டம், நடைமுறைக்கு வந்தது.
கடந்த, 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐ.நா., பொதுச் சபையில், அணு ஆயுத தடை ஒப்பந்தம் தொடர்பான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கு, 120க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்திருந்த போதும், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் ஆகிய ஒன்பது நாடுகள், ஆதரவு தெரிவிக்கவில்லை.
இந்தநிலையில், கடந்த ஆண்டு ஒக்டோபரில், அணு ஆயுத தடை ஒப்பந்தத்திற்கு சட்ட அதிகாரம் வழங்கும் ஒப்பந்தத்தில், 50 நாடுகள் கையொப்பமிட்டன.
இதை அமுல்படுத்துவதற்கான அவகாசம் முடிவடைந்துள்ளதை அடுத்து, அணு ஆயுத தடை சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக, ஐ.நா. அறிவித்துள்ளது.
இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நாடுகளின் எண்ணிக்கையும், 61 ஆக அதிகரித்துள்ளது.