அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவிற்கும் இடையிலான தொலைபேசி மூலமான உரையாடல் மாலையில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக பைடன் பொறுப்பேற்றதன் பின்னர் முதன்முதலாக சர்வதேச தலைவர் ஒருவருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தை இதுவாகும்.
இந்தப்பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் இதுவரையில் உத்தியோக பூர்வமான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
எனினும், இன்று காலையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்திருந்த பிரதமர் ரூடோ, அமெரிக்கா, கனடா இடையே இருதரப்பு ஒத்துழைப்புக்களை மேம்படச் செய்தல், இணைந்து செயற்படுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தப்படும் என்று கூறியிருந்தார்.
முன்னதாக பைடன் பதவியேற்ற வேளையோடு அமெரிக்கா, கனடா இடையிலான எரிவாயு இணைப்பு திட்டம் கீஸ்டோன் எக்ஸ்.எல் (Keystone XL) குழாய் விரிவாக்கத் திட்டம் இரத்து செய்தல் ஆகிய ஆவணங்களில் கையொப்பம் இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.