ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை சிறிலங்காவில் அவசரகால தேவைக்கு பயன்படுத்துவதற்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன்ன தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் -அஸ்ட்ரா செனெகா மற்றும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் V (Sputnik V) ஆகிய தடுப்பு மருந்துக்கள், தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தன.
இதில், ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ரா செனெகா தடுப்பூசியை சிறிலங்காவில் அவசரகால தேவைக்கு பயன்படுத்துவதற்கு, அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.