ஈராக்கில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு தற்கொலைக் குண்டு தாக்குதல்களில், 32 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் பாக்தாத்தின் மத்திய பகுதியில் உள்ள, சந்தை ஒன்றிலேயே, இரண்டு பேர் அடுத்தடுத்து குண்டுகளை வெடிக்க வைத்து தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில், 32 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர் என்றும், மேலும், 110க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. காயமடைந்த பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், உயிரிழப்பு அதிகமாகும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.