ஜெனிவா கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரால் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கையின் முற்கூட்டிய பிரதியை வெளிவிவகார அமைச்சு ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால், ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த அறிக்கையின் பிரதி, வெளிவிவகார அமைச்சினால் தற்போது ஆராயப்பட்டு வருவதாக, பிராந்திய ஒத்துழைப்பு அமைச்சின் ஊடகச் செயலாளர் டேஷன் கோணவெல தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் அதிகாரபூர்வமாக எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்தே, தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கைக்கான சிறிலங்கா அரசாங்கத்தின் பதில், கூடிய விரைவில் ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், டேஷன் கோணவெல தெரிவித்துள்ளார்.