சினமென் கிராண்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுதாக்குதலை மேற்கொண்ட நபரின் தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறித்து கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கரிசனை வெளியிட்டுள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகரவை பேராயர் இல்லத்திற்கு அழைத்து அவர் தனது கவலையை வெளியிட்டுள்ளதோடு இந்த தொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்தும் அகேள்வி எழுப்பியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று 21 மாதங்களாகின்ற போதிலும் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்ட சந்தேக நபர் எவரும் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளின்போது அவர்களிற்கு எதிரான ஆதாரங்கள் அவர்களிற்கு சாதகமான விதததில் பயன்படுத்தப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொளுமாறும் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வேண்டுகோள் விடுத்துள்ளார்.