வடக்கில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 276 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோதே ஐவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தில் மூவருக்கும் யாழ்ப்பாணத்தில் இருவருக்கும் இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் பயிலும் மாத்தளையைச் சேர்ந்த மாணவி என மருத்துவர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வவுனியா, பட்டாணிசூர் கிராமத்தின் சில வீதிகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளன.
இதன்படி. பட்டாணிசூர் கிராமத்தின் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் ஒழுங்கைகள் இன்று மாலை ஆறு மணியிலிருந்து முடக்கப்பட்டு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.