வீட்டுக்குள் முடக்கப்பட்டிரக்கும் உத்தரவு அமுல்படுத்தப்பட்டள்ள ஒன்ராரியோ மாகாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2ஆயிரத்து 662பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
அத்துடன் 87 மரணங்களும் சம்பவித்துள்ளன. அதேவேளை கியூபெக்கில் ஆயிரத்து 631பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது.
இதேவேளை நாடாளவிய ரீதியில் கொரோனா வைரஸ் (தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் ஐந்தாயிரத்து 957பேர் பாதிக்கப்பட்டதோடு 206பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை ஏழு இலட்சத்து 37ஆயிரத்து 407பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 18ஆயிரத்து 828பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 65ஆயிரத்து 750பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 868பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





