ஐரோப்பிய நாடுகளிற்கான தனது கொரோனா வைரஸ் தடுப் பு மருந்தினை வழங்குவதில் பிரச்சினைகள் உருவாகியுள்ளன என அஸ்டிராஜெனேகா அறிவித்துள்ளது.
மருந்து உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாகவே ஆரம்பகட்ட மருந்துகள் கிடைக்கும் என அஸ்டிரா ஜெனேகா தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவின் உணவு ஆணையாளர் ஸ்டெல்லா கிரியகிடிஸ் இந்த அறிவிப்பினை அடுத்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.