ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையாரின் அறிக்கைக்கு, சிறிலங்கா அரசாங்கத்தின் பதில் வரும் புதன்கிழமை அனுப்பி வைக்கப்படவுள்ளது.
சிறிலங்கா வெளியுறவு அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடரில், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பசெலெட் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கை, சிறிலங்கா அரசாங்கத்தின் பதிலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ள வெளியுறவு செயலாளர் அட்மிரல் கொலம்பகே, வரும் புதன்கிழமை அரசாங்கத்தின் பதில் அனுப்பி வைக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடு இந்த பதிலில் உள்ளடக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.