கியூபெக் ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவைத் தடுப்பதற்கான புதிய மருந்தொன்றை கண்டறிந்துள்ளதாக தெரிவித்தனர்.
மொண்ட்ரீல் ஹார்ட் இன்ஸ்டிடியூட்டினைச் (Montreal Heart Institute) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொல்கிசின் (colchicine) மாத்திரையை கொரோனாவுக்கு எதிராக பயன்படுத்த முடியும் என்று அறிவித்துள்ளர்.
அத்துடன் இந்த மருந்து ஏற்கனவே அறியப்பட்ட மற்றும் பிற நோய்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. இந்நிலையில் அந்த மருந்து மீதுதான ஆய்வுகள் நிறைவுக்கு வந்து தற்போது கொரோனாவை எதிரான போராட்டத்தில் இதுவொரு மைல் கல் என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய வைத்தியர் ஜீன்-கிளாட் டார்டிஃப் (Jean-Claude Tardif) கூறியுள்ளார்.