தனது பேச்சை தொண்டர்கள் கேட்காவிட்டால் கிரீஸ் டப்பாவை போல போல மிதித்து விடுவேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய சீமான்,
“நாம் தமிழர் கட்சிக்கு நான் தான் கட்டளை தளபதி. நான் போட்ட கோட்டிற்குள் தான் நீங்கள் செயற்பட வேண்டும்.
உங்கள் கருத்தை கேட்டு நான் நடக்கமாட்டேன். நான் ஓடும் திசையில் தான் நீங்களும் ஓட வேண்டும்.
நான் அறிவிக்கும் வேட்பாளர்கள் குறித்து தொண்டர்கள் யாரும் என்னிடம் கேள்வி கேட்க கூடாது.
வேட்பாளர்கள் அறிவிப்பை யாரேனும் எதிர்த்தால் கிரீஸ் டப்பாவை மிதிப்பது போல் மிதித்து விடுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
சீமானின் இந்த உரை கட்சியினரிடையே பலத்த சர்ச்சையை உருவாக்கியுள்ளது.