இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவராக நியமிக்கப்பட்ட மிலிந்த மொறகொடவுக்கு சிறப்பு நிலையை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவுக்கான தூதுவராக பாத் பைன்டர் அமைப்பின் நிறுவுனரான மிலிந்த மொறகொடவை சிறிலங்கா அரசாங்கம் நியமித்திருந்தது.
அத்துடன், முதல்முறையாக, அமைச்சரவை அந்தஸ்துடன் கூடிய தூதுவர் என்ற அந்தஸ்தை வழங்குவதாகவும் சிறிலங்கா அரசாங்கம் கூறியிருந்தது.
மிலிந்த மொறகொடவின் நியமனத்தை புதுடெல்லி உறுதிப்படுத்தியுள்ள போதும், அவருக்கான அமைச்சர் நிலை தூதுவர் என்ற சிறப்பு நிலையை ஏற்றுக் கொள்ள இந்தியா இணங்கவில்லை என்று கூறப்படுகிறது,
இந்த நிலையில், புதுடெல்லியில் தூதுவர் பதவியைப் பொறுப்பேற்க மிலிந்த மொறகொட ஆர்வம் காட்டவில்லை என்றும், இதனால் சிறிலங்கா அரசாங்கம் புதிதாக ஒருவரை நியமிப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.