இஸ்ரேல் முழுவதும் பாடசாலைகள் மற்றும் மத கற்கை நிலையங்கள் திறப்பதன் மூலம் கொரோனா வைரஸ் முடக்கல் விதிகளை மீறிய தீவிர யூதர்களுடன் காவல்துறையினர் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகரித்து வரும் கொரோனா நோயார்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த இஸ்ரேல் மூன்றாவது முடக்கலுக்கு மத்தியில் உள்ளது.
இந்நிலையில் முடக்கல் உத்தரவுகளை மீறி திறக்கப்பட்ட மத கற்கை நிலையங்களை காவல்துறையினர் மீண்டும் மூடுவதற்கு முயன்றதால் ஜெருசலேம் மற்றும் அஷ்டோடில் மோதல்கள் வெடித்தன.
பல பெரிய யூத பிரிவுகள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி, பாடசாலைகளை தொடர்ந்து திறந்து, ஜெப ஆலயங்களில் பிரார்த்தனை செய்து, வெகுஜன திருமணங்களையும் இறுதிச் சடங்குகளையும் நடத்தியுள்ளன.
எனினும் அவ்விதமாக செயற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.