கனடாவிற்கான பைசர் நிறுவத்தின் தடுப்பூசிகள் அடுத்து வரும் வாரங்களில் மீண்டும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சமஷ்டி அரசாங்கத்திடம் இரண்டாவது உறுதிப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பெயர் குறிப்பிட விரும்பாத பிரதமர் அலுவலக அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே பிரதமர் ஜஸ்டின் ரூடோ பைசர் நிறுவனத்துடன் பேச்சுக்களை நடத்தி சீரான விநியோக நடவடிக்கைகளுக்கான வழிவகைகளை மேற்கொண்டுள்ளார்.
அதேநேரம், கொள்வனவுத்துறை அமைச்சரும், ஏற்கனவே பல்வேறு பட்ட தடுப்பூசி முகவர்கள் மற்றும் விநியோகத்தர்களுடன் கலந்தாலோசித்து இணக்கப்பாடுகளை எட்டியுள்ளதாகவும் செப்டம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





